சங்கு சக்கரத்துடன் கருடன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவெள்ளியங்குடியில் உள்ள கோலவல்லி ராமன் கோவிலில் சங்கு சக்கரத்துடன் கருடன் காட்சியளிக்கிறார்.

Update: 2021-03-16 12:33 GMT
பெருமாள் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும், அவர் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரங்களைத் தாங்கியபடிதான் காட்சியளிப்பார். அவருக்கு நேர் எதிரில் கருடாழ்வார், தன்னுடைய இரு கரங்களையும் கூப்பி பெருமாளை வணங்கிய நிலையில் காணப்படுவார். ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் திருவெள்ளியங்குடியில் உள்ள கோலவல்லி ராமன் கோவிலில், சங்கு சக்கரம் இல்லாத பெருமாளாக காட்சியளிக்கிறார். 

இவர் தன்னுடைய சங்கு, சக்கரத்தை, சுக்ராச்சாரியாரின் வேண்டுகோளின்படி கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, இந்த நிலையில் இங்கு காட்சி தருகிறாராம். எனவே இங்குள்ள கருடாழ்வார், தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரங்களைத் தாங்கி நிற்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட கருடாழ்வார் என்பதால், மற்ற இருகரங்களும் பெருமாளை சேவித்தபடி உள்ளன. இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.

மேலும் செய்திகள்