அஷ்ட நரசிம்மர் தலங்கள் - அந்திலி - சிங்கப்பெருமாள் கோவில்

மகாவிஷ்ணுவின் வாகனமாக இருப்பவர், கருடன். இவர் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார்.

Update: 2021-05-22 22:45 GMT
அப்படிப்பட்ட கருடனுக்கு, மகாவிஷ்ணு தன்னுடைய நரசிம்மர் அவதாரத்தை காட்டிய தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில், தனது வாகனமான கருடனைக் கூட அழைக்காமல் சென்றுவிட்டார், இறைவன். இதனால் வருத்தம் அடைந்த கருடன், இறைவனைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார். இறுதியாக இந்த தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். இதையடுத்து கருடனுக்கு, இறைவன் நரசிம்மராக காட்சி அளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூர் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில்தான் அந்திலி திருத்தலம் அமைந்துள்ளது.

சிங்கப்பெருமாள் கோவில்

ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இங்குள்ள நரசிம்ம மூர்த்தி, ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘பாடலம்’ என்றால் ‘சிவப்பு’, ‘அத்ரி’ என்றால் ‘மலை’ என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இங்குள்ள நரசிம்மருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை தொங்கவிட்டபடியும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் அருள்பாலிக்கிறார். இந்த நரசிம்ம மூர்த்தியின் உருவம் மிகப்பெரியதாகும்.

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்