மதுரை: திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம்
மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.;
மதுரை,
மதுரை மாவட்டம்,மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த ஸ்தலமான திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் - வேதநாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 ஆம் தேதியன்று வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேலூருக்கு திருமறைநாதர் எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா கடந்த 7 -ஆம் தேதி நடைபெற்றது. நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதுல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருமறைநாதர் , வேதநாயகி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். கிராம பெரியவர்கள் பாரம்பரிய வழக்கப்படி வழிபட்டு வெள்ளை வீசினர்.
அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திரண்டு வந்திருந்தனர். இதனால் கோவில் சுற்றுப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது