திருவொற்றியூர்: கருட சேவையில் சரிந்த பெருமாள் சிலை...பக்தர்கள் அதிர்ச்சி

பெருமாள் சிலை சரிந்ததை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வாசல் கதவு மீண்டும் திறக்கப்பட்டது.

Update: 2024-05-22 11:00 GMT

சென்னை,

சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பவள வண்ண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

கருட சேவை நிகழ்ச்சியின்போது பல்லக்கை தூக்கியபோது அதன் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பட்டாச்சாரியார் முரளி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

பெருமாள் சிலை சரிந்ததும் உடனடியாக கோவில் வாசல் மூடப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது. மீண்டும் கருட வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்