பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய, விடிய தேன் அபிஷேகம்
பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய, விடிய தேன் அபிஷேகம்;
கபிஸ்தலம்
சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியான நேற்று மாலை தொடங்கிய தேன் அபிஷேகம் விடிய, விடிய நடைபெற்றது. முன்னதாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணத்திலிருந்து சிறப்பு பஸ்கள் திருப்புறம்பியத்திற்கு இயக்கியது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.