முதல் ஒருநாள் போட்டி: 8 ஓவர்களில் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

குறிப்பாக ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.;

Update:2022-07-12 18:18 IST

லண்டன்,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டா, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய 5 முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

குறிப்பாக ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி இதுவரை 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்