உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்: கிழக்கு மண்டலம் ‘சாம்பியன்’

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான மேற்கு மண்டலமும், மனோஜ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டலமும் சந்தித்தன.

Update: 2017-02-18 21:07 GMT

மும்பை,

சையது முஷ்தாக் அலி கோப்பைக்கான மண்டலங்கள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான மேற்கு மண்டலமும், மனோஜ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டலமும் சந்தித்தன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு மண்டல அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கிழக்கு மண்டலம் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் சிங் (58 ரன், 34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), இஷாங் ஜக்கி (56 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) அரைசதம் அடித்தனர்.

இந்த போட்டியில் மொத்தம் 5 மண்டலங்கள் பங்கேற்றன. இதில் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மத்திய மண்டலம் 12 புள்ளிகளுடன் 2–வது இடத்தையும், தெற்கு மண்டலம் 4 புள்ளியுடன் 3–வது இடத்தையும் பிடித்தது.

மேலும் செய்திகள்