வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் 407 ரன்னில் ‘ஆல்–அவுட்’

பாகிஸ்தான் – வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் கடந்த 21–ந்தேதி தொடங்கியது.

Update: 2017-04-25 20:41 GMT
கிங்ஸ்டன்,

பாகிஸ்தான் – வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. 4–வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 407 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் சதம் அடிக்க முடியாமல் 99 ரன்னுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றது இதுவே முதல்முறையாகும்.  121 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சில் 152 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 32 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்