டி20 கிரிக்கெட்; தன்சித் ஹசன் அரைசதம்...ஜிம்பாப்வேவை வீழ்த்திய வங்காளதேசம்

வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.;

Update:2024-05-04 08:37 IST

image courtesy; @BCBtigers

சட்டோகிராம்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஒவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 43 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி 15.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 126 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக தன்சித் ஹசன் 67 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்