ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

Update: 2017-11-19 20:53 GMT

கோலாலம்பூர்,

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 248 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் இக்ரம் பைஜி (107 ரன், 113 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 22.1 ஓவர்களில் 63 ரன்களில் அடங்கியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 185 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றதுடன், முதல்முறையாக இந்த கோப்பையை வசப்படுத்தி வரலாறு படைத்தது. அரைஇறுதியில் 6 விக்கெட்டுகளை அள்ளிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜட்ரன் இறுதி ஆட்டத்திலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் இந்த போட்டியில் அடியெடுத்து வைத்த இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்