பள்ளி கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவன் 1,045 ரன்கள் குவித்து அசத்தல்

14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான நவிமும்பை கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை அருகில் உள்ள கோபர்னகர்னேவில் நடந்தது.

Update: 2018-02-01 03:10 GMT
மும்பை,

யஷ்வந்த்ராவ் சவான் பள்ளி அணிக்காக விளையாடிய தனிஷ்க் கவேட் 2 நாட்கள் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி வியப்பளித்தார். 13 வயதான அவர் 515 பந்துகளில் 149 பவுண்டரி, 67 சிக்சருடன் 1,045 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த போட்டிக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை. அங்கீகாரம் பெற்ற போட்டியாக இது இருந்து இருந்தால் சாதனை ஸ்கோராக அமைந்து இருக்கும். 2016-ம் ஆண்டில் மும்பை வீரர் பிரணாவ் தனவாடே பள்ளி கிரிக்கெட் போட்டியில் 1,009 ரன்கள் குவித்ததே சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்