முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2018-03-26 20:44 GMT
மும்பை, 

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. பெத் மூனி (71 ரன்கள்), எலிசே விலானி (61 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 33 ரன்னும், அனுஜா பட்டீல் ஆட்டம் இழக்காமல் 38 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டி தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது (ஹாட்ரிக்) தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

மேலும் செய்திகள்