இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி-டி.வி. ஒளிபரப்பு உரிமம் பெறுவதற்கான தொகை ரூ.6,032 கோடி

டி.வி. ஒளிபரப்பு உரிமம் பெறுவதற்கான தொகை ரூ.6,032 கோடியை எட்டியது.

Update: 2018-04-04 23:00 GMT
மும்பை,

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பெற (102 சர்வதேச போட்டிகள்) ஸ்டார் குழுமம், சோனி, ஜியோ ஆகிய நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த முறை இதற்குரிய உரிமத்தை வழங்க புதுமையாக ஆன்-லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.4,442 கோடி வரை ஏலத்தொகை வந்தது. அந்த தொகையில் இருந்து நேற்று 2-வது நாள் ஏலம் தொடர்ந்தது. மூன்று நிறுவனங்களும் தொகையை உயர்த்திக் கொண்டே வந்தன. 2-வது நாள் இறுதியில் ஏலத்தொகை ரூ.6,032.5 கோடிக்கு வந்து விட்டது. அதாவது ஒரு ஆட்டத்திற்கு வழங்க வேண்டிய தொகை கிட்டத்தட்ட ரூ.60 கோடியை எட்டியது.

முந்தைய சீசனுடன் ஒப்பிடும் போது 56 சதவீத தொகை எகிறியுள்ளது. மூன்று நிறுவனங்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதை இன்று பிற்பகலில் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்க இருக்கிறது.

மேலும் செய்திகள்