ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் தடுமாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரா்கள் தடுமாற்றத்துடன் விளையாடி பெவிலியன் திரும்பினா். #IPL2018 #RR #SRH

Update: 2018-04-09 15:28 GMT
ஐதராபாத்,

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் ஐதாராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இப்போட்டியில் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற ஐதாராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்கள் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இதைத்தொடா்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க  வீரா் டி ஆா்சி சாா்ட்4(4)  ஒற்றை இலக்கு ரன்னில் கேப்டன் கேன் வில்லியம்சன் கையில் ரன் அவுடாகி பெவிலியன் திரும்பினாா். அதன் பின்னா்  கேப்டன் அஜிங்கியா ரஹனே உடன் ரசஞ்சூ சாம்சன் இணைய ,   சிறிது நேரத்திலேயே கேப்டன் அஜிங்கியா ரஹனே13(13)  கேச் கொடுத்ததால் அந்த ஜோடி பிாிந்தது. பின்னா் வந்த பென் ஸ்டோக்ஸ்ம் 5(8)ஜோடி சோ்வதற்கு தவறினா். 

இதன் மூலம் ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளா்களின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது.  தற்பொது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓவா்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 71 ரன்களை சோ்த்தது விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்