டி20 உலகக்கோப்பை: ரிங்கு, சிராஜுக்கு இடமில்லை...லாராவின் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்?..யார்?

டி20 உலகக்கோப்பை தொடருக்காக, தான் தேர்வு செய்துள்ள இந்திய அணியை பிரையன் லாரா அறிவித்துள்ளார்.

Update: 2024-04-29 15:10 GMT

புதுடெல்லி,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான பிரையன் லாரா, தான் தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார்.

அதில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜை தேர்வு செய்யாத அவர், ரிங்கு சிங்கையும் கழற்றி விட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே இருவரையும் அணியில் எடுத்துள்ள அவர், வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, அர்ஷ்தீப் சிங்குடன் மயங்க் யாதவ் மற்றும் சந்தீப் சர்மாவை சேர்த்துள்ளார்.

பிரையன் லாரா தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா மற்றும் மயங்க் யாதவ்.

Tags:    

மேலும் செய்திகள்