கிரிக்கெட்
பாகிஸ்தான் கேப்டனிடம் சூதாட்ட பேரம் போட்டி அமைப்பாளருக்கு தடை

பாகிஸ்தான் கேப்டனிடம் சூதாட்ட பேரம் பேசிய கிரிக்கெட் போட்டி அமைப்பாளர் இர்பான் அன்சாரியை தடை செய்தது ஐசிசி.
இஸ்லாமாபாத்

கடந்த 2017ம் ஆண்டு அபு தாபியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதற்கு முன், கிரிக்கெட் போட்டியின் அமைப்பாளரும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் முன்னாள் நிர்வாகியுமான இர்ஃபான் அன்சாரி, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸிடம் சூதாட்டம் செய்ய பேரம் பேசியுள்ளார். சர்ஃபராஸ் இந்த விவகாரத்தை உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எடுத்துச் சென்றார். 

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி-யிடம் புகார் அளித்ததை அடுத்து, இர்ஃபான் அன்சாரி தற்காலிகமாக தடை செய்யப்பட்டார். மூன்று பிரிவுகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அன்சாரி, வரும் மே 19ம் தேதி முதல் 14 நாட்களுக்குள், இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று ஐசிசி-யால் உத்தரவிடப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன.
2. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மகன், மருமகன் சேர்ப்பு தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் மீது கூறப்பட்ட புகாரை அவர் நிராகரித்துள்ளார்.
3. நெற்றியில் குங்குமம் - சுடிதார் துப்பட்டா அணிந்து பெண் வேடத்தில் கிரிக்கெட் வீரர் கம்பீர்
சுடிதார் துப்பட்டா அணிந்து குங்குமம் வைத்து இருக்கும் கிரிக்கெட் வீரர் கம்பீரின் புகைப்படம் வைரலாகி உள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
5. இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார்?
இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.