கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1–ந்தேதி தொடங்கியது.
ஹெட்டிங்லே, இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 174 ரன்னில் அடங்கியதை அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2–வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 363 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. ஜோஸ் பட்லர் 80 ரன்களுடன் (101 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.பின்னர் 189 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர்கள், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். கொத்து கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 46 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இமாம் உல்–ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாஹூத்தின் 33 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், டோமினிக் பெஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–1 என்ற கணக்கில் சமன் செய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அண்டைய நாடுகளுடன் எப்படி நடக்கவேண்டும் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் -ராஜ்நாத் சிங்
அண்டைய நாடுகளுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பாகிஸ்தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
2. பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை: இம்ரான் கான்
பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
3. பாகிஸ்தானில் “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நாய்களை விரட்ட பயன்படுத்திய வியூகம் குறித்து முன்னாள் கமாண்டர் பேச்சு
பாகிஸ்தானில் “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடத்திய போது உள்ளூர் நாய்களை விரட்ட பயன்படுத்திய வியூகம் குறித்து முன்னாள் கமாண்டர் பேசியுள்ளார்.
4. ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறினார்.
5. பாகிஸ்தானில் ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன்- கார்கள் இறக்குமதி செய்ய தடை?
பாகிஸ்தானில் இனி ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான்.