நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: 2 முன்னணி வீரர்கள் விலகல்..பாகிஸ்தானுக்கு பலத்த பின்னடைவு

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

Update: 2024-04-25 07:23 GMT

image courtesy: ICC 

லாகூர்,

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், அடுத்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இர்பான் கான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது பாகிஸ்தான் அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்