விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

Update: 2018-09-25 21:00 GMT

சென்னை, 

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு–ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் இ‌ஷன் கிஷான் 85 ரன்கள் சேர்த்தார். தமிழக அணி தரப்பில் வருண்சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், நடராஜன், முகமது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி 49.5 ஓவர்களில் 299 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆகி 8 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கேப்டன் பாபா இந்திரஜித்தின் (101 ரன்கள்) சதம் வீணானது. 4–வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும்.

மேலும் செய்திகள்