ராஜ்கோட் டெஸ்ட் : கோலி 24 வது சதம் - சச்சினை முந்தினார்

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி 24 வது சதம் அடித்தார் இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் சதம் அடித்தவர்களில் சச்சினை முந்தினார்.

Update: 2018-10-05 06:10 GMT
ராஜ்கோட்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சிறப்பான தொடக்கம் கண்டுள்ள இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்துள்ளது. பிரித்வி ஷா சதமும், புஜாரா, கோலி அரைசதமும் விளாசினர்.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் புதுவரவாக மும்பையை சேர்ந்த 18 வயதான பிரித்வி ஷா இடம் பிடித்தார்.

முதல் போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதத்தை சுவைத்த இளம் வீரர் என்ற சிறப்பை பெற்றார். புஜாரா துரதிர்ஷ்டவசமாக 86 ரன்களில் அவுட்  ஆனார். தொடர்ந்து கோலி இறங்கினார்

அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்த பிரித்வி ஷா 134 ரன்களில்சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூவின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய துணை கேப்டன் ரஹானே தனது பங்குக்கு 41 ரன்கள்எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

முதல் நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 17 ரன்களுடனும் களத்தி இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று  வீராட் கோலி சதம் அடித்தார். 200 பந்துகளை சந்தித்து கோலி111 ரன்களை எடுத்து உள்ளார்.இது கோலியின் 24 சதமாகும்.  

தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி என அனைத்து வகைப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களில் தலை சிறந்த வீரராக கோலி உள்ளார். இதுவரை இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அடிக்கும் 4 வது சதம் இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அவரது இரண்டாவது சதமாகும்.

இந்த சதத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 24 சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் சச்சினை முந்தியுள்ளார். சச்சின் 125 இன்னிங்ஸ்களில் 24 சதம் அடித்துள்ளார். கோலி 123 இன்னிங்ஸ்களில் 24 வது சதத்தை அடித்துள்ளார். டான் பிராட்மேன் 66 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்து முதலிடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள்