தனஞ்ஜெயா பந்து வீச தடை

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-11 21:45 GMT
துபாய்,

கடந்த மாதம் காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் கூறினர். இதையடுத்து அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில், பந்து வீசும் போது அவரது முழங்கை அனுமதிக்கப்பட்டுள்ள 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் பந்து வீச ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது. உள்ளூர் போட்டியில் பந்து வீச அவரை அனுமதிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து கொள்ளலாம்.

25 வயதான தனஞ்ஜெயா 5 டெஸ்டில் 27 விக்கெட்டும், 30 ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்டும், 16 இருபது ஓவர் போட்டியில் 14 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.


மேலும் செய்திகள்