ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 227 ரன்னில் ஆல்-அவுட்

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - இமாச்சலபிரதேச அணிகள் (பி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் நேற்று தொடங்கியது.

Update: 2018-12-22 21:15 GMT
தர்மசாலா, 

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - இமாச்சலபிரதேச அணிகள் (பி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 53 ரன்களும், அபிஷேக் தன்வர் 44 ரன்களும், தினேஷ் கார்த்திக் 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இமாச்சலபிரதேச அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தாவில் நடக்கும் அருணாச்சலபிரதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மணிப்பூர் அணி 26 ஓவர்களில் வெறும் 85 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய அருணாச்சலபிரதேச அணி 23.3 ஓவர்களில் 66 ரன்னில் முடங்கியது. அடுத்து 19 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மணிப்பூர் அணி நேற்றைய முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்