நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி 4 விக்கெட் இழந்து தள்ளாடி வருகிறது

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2019-02-06 09:31 GMT
வெலிங்டன்,

இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் தலா 34 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 220 ரன் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணி  8.4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 1 ரன், தவான் 29 ரன்களும், ரிஷப் பண்ட் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மேலும் செய்திகள்