நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 234 ரன்னில் ஆல்-அவுட்

முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

Update: 2019-02-28 22:15 GMT
ஹாமில்டன்,

வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அபாரமாக ஆடி தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்த தமிம் இக்பால் 126 ரன்களில் (128 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். வங்காளதேச அணி 59.2 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 234 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நீல் வாக்னெர் 5 விக்கெட்டும், டிம் சவுதி 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய முடிவில் 28 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்துள்ளது. ஜீத் ராவல் 51 ரன்னும், டாம் லாதம் 35 ரன்னும் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்