விராட் கோலியின் கபடி அணியில் எந்தெந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இடம்?

விராட் கோலியின் தனது கபடி அணியில் எந்தெந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இடம் உள்ளது என்பதை தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-29 00:09 GMT
மும்பை,

புரோ கபடி போட்டியை நேற்று முன்தினம் மும்பையில் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம், இந்திய கிரிக்கெட் வீரர்களில் இருந்து கபடி அணியை உருவாக்குங்கள் என்று உங்களிடம் கேட்டால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோலி தனது கபடி அணியில் தயக்கமின்றி முதலில் டோனியின் பெயரை உச்சரித்தார். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா, ரிஷாப் பண்ட், உமேஷ் யாதவ், பும்ரா, லோகேஷ் ராகுல் ஆகியோரை வரிசைப்படுத்தினார். கபடிக்கு நிறைய உடல்வலிமையும், வேகமும் அவசியம் அதன் அடிப்படையில் இவர்களை தேர்வு செய்கிறேன் என்றும் தன்னை விட இவர்கள் கபடிக்கு வலுவானவர்கள் என்று கருதுவதால் கபடி அணியில் தனக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் கோலி- டோனி ஜோடிக்கு இணையாக கபடியில் யாரை ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது, ராகுல் சவுத்ரி-அஜய் தாகூர் (இருவரும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்) ஆகியோரை சுட்டிக்காட்டினார். களத்தில் இவர்களிடையிலான இணக்கமான புரிந்துணர்வு அப்படியே தன்னையும், டோனியையும் நினைவுப்படுத்துவதாக கூறினார். கபடியில் தன்னை கவர்ந்த வீரர் ராகுல் சவுத்ரி என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்