‘ஆட்டம் சமன் ஆனால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர்’ - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி

ஆட்டம் சமன் ஆனால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2019-09-24 23:10 GMT
சிட்னி,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் டை (சமன்) ஆனதும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் சமன் ஆனதால் அதிக பவுண்டரி அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறை கிரிக்கெட் அரங்கில் சர்ச்சையை கிளம்பியது.

இத்தகைய சலசலப்பை தவிர்க்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது விதிமுறையில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு நடக்கும் பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்படும். அதுவும் சமன் ஆனால் மறுபடியும் சூப்பர் ஓவர் வரும். அதாவது துல்லியமான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்