பாகிஸ்தான்-இலங்கை மோதும் ஒரு நாள் கிரிக்கெட் கராச்சியில் இன்று நடக்கிறது

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை-பாகிஸ்தான் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Update: 2019-09-26 23:00 GMT
கராச்சி,

 2009-ம் ஆண்டு இலங்கை அணி அங்கு சென்று விளையாடிய போது தான் வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்த போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அச்சம் காரணமாக மலிங்கா, கருணாரத்னே, மேத்யூஸ், சன்டிமால், டிக்வெல்லா, திசரா பெரேரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விலகிய நிலையில் இலங்கை அணி திரிமன்னே தலைமையில் களம் இறங்குகிறது. சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி வலுவாக இருப்பதுடன் சாதகமான உள்ளூர் சூழலையும் பெற்றிருப்பதால் அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. கராச்சியில் ஒரு நாள் போட்டி நடப்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பகல்-இரவு மோதலான இந்த ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிட கணிசமான வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்