ஜனவரியில் இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர்; இலங்கை கிரிக்கெட் வாரியம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் வரும் ஜனவரியில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-02 08:35 GMT
கொழும்பு,

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 34 லட்சத்து ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 615 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்து 83 ஆயிரத்து 816 பேர் மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 1,147 ஆக உயர்வடைந்து இருந்தது. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக உயர்வடைந்து உள்ளது.  9,951 பேர் குணமடைந்தும், 26,167 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43ல் இருந்து 37 ஆயிரத்து 336 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் இலங்கையில் 2 டெஸ்டுகள் விளையாட இருந்தது இங்கிலாந்து அணி. இதற்காக இலங்கைக்குச் சென்று 10 நாள்கள் தங்கியிருந்து ஒரு பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றது. பிறகு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐசிசி அட்டவணைப்படி அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. எனினும் இந்தத் தொடர் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்