மனநல ஆலோசகர் எப்போதும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் - டோனி

மனநல ஆலோசகர் எப்போதும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளார்.

Update: 2020-05-07 08:48 GMT
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, நாட்டின் விளையாட்டு வீரர்கள் மனநோய் பிரச்சினைக்கும் வரும்போது தங்களுக்கு ஏதேனும் பலவீனம் இருப்பதை ஏற்கத் தயங்குவதாகவும், அதனால்தான் ஒரு மனநிலை பயிற்சியாளர் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எம்போர் என்ற அமைப்பு நடத்திய ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுடன் உரையாடிய டோனி கூறியதாவது:

நான் பேட்டிங் செய்ய செல்லும்போது முதல் 5, 10 பந்துகளை எதிர்கொள்ளும்போது என்னுடைய இதயத் துடிப்பு எகிறும். இதனால் எனக்கு மன அழுத்தம் உண்டாகும். எனக்குப் பயம் உண்டாகும். எல்லோருக்கும் இப்படித்தான். இதை எதிர்கொள்வது எப்படி? இது சிறிய பிரச்சினை தான். ஆனால் பல சமயங்களில் பயிற்சியாளரிடம் இதைக் கூறத் தயங்குவோம். இதனால் தான் வீரருக்கும் பயிற்சியாளருக்குமான உறவு என்பது மிகவும் முக்கியமானது. 

மனநல ஆலோசகர் என்பவர் 10, 15 நாள்களுக்கு மட்டும் அணியுடன் இருக்கக்கூடாது. எனில் அவரால் அனுபவங்களை மட்டுமே கூற முடியும். அணியுடன் அவர் எப்போதும் இருந்தால் ஆட்டம் நடைபெறும்போது எப்போதெல்லாம் வீரர்கள் அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் ஒரு வீரருக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான உறவு எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் மிக முக்கியமானது

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்