விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணி தோல்வி
தமிழக அணி, கர்நாடகாவை (ஏ பிரிவு) எதிர்கொண்டது.;
ஆமதாபாத்,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆமாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி, கர்நாடகாவை (ஏ பிரிவு) எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 49.5 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் என்.ஜெகதீசன் 65 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பால் 57 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி 47.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்தது. மயங்க் அகர்வால் (58 ரன்), விக்கெட் கீப்பர் கிருஷ்ணன் ஷிரிஜித் (77 ரன்), ஸ்ரேயாஸ் கோபால் (55 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். 3-வது லீக்கில் ஆடிய தமிழகத்துக்கு இது 2-வது தோல்வியாகும்.