மகளிர் பிரீமியர் லீக்: எல்லிஸ் பெர்ரி உள்பட 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் விலகல்
மகளிர் பிரீமியர் லீக் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது.;
டெல்லி,
4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவி மும்பை மற்றும் வதோதராவில் வரும் 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவி மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் எல்லிஸ் பெர்ரி , அனபெல் சதர்லெண்ட் ஆகிய இருவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இருவரும் தனிப்பட்டக்காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். நடப்பு தொடரில் எல்லிஸ் பெர்ரி பெங்களூரு அணியிலும், அனபெல் சதர்லெண்ட் டெல்லி அணியிலும் இடம்பெற்றிருந்தனர். இரு வீரராங்கனைகளும் தொடரில் இருந்து விலகியுள்ள நிகழ்வு இரு அணிகளுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.