இந்திய பெண்கள் அணிக்கு புதிய தேர்வு குழு தலைவர் நியமனம்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த ஹேமலதா கலா மற்றும் 4 உறுப்பினர்களின் பதவி காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

Update: 2020-09-26 22:30 GMT
மும்பை,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த ஹேமலதா கலா மற்றும் 4 உறுப்பினர்களின் பதவி காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் புதிய தேர்வு குழு தலைவராக இந்திய முன்னாள் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான 43 வயதான நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 10 டெஸ்ட் மற்றும் 97 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். முன்னாள் வீராங்கனைகளான மிது முகர்ஜி, ரேணு மார்க்ரெட், ஆர்த்தி வைத்யா, கல்பனா ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களது பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்