ஐபிஎல் தொடரில் இருந்து இஷாந்த் சர்மா விலகல்

டெல்லி அணியில் இருந்து அமித்மிஸ்ரா ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2020-10-12 15:36 GMT
அபுதாபி,

13-வது ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார். நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும்தான் இஷாந்த் சர்மா விளையாடினார். 

அக்டோபர் 7-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாக  டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  டெல்லி அணியில் இருந்து அமித்மிஸ்ரா ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்