‘அஸ்வின் பந்துவீச்சை குறைவாக மதிப்பிட்டு விட்டனர்’ - பாண்டிங்

‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடும் நோக்குடன் இருந்தது போல் தெரிந்தது. அவர்கள் அஸ்வினை குறைவாக மதிப்பிட்டு விட்டனர்.

Update: 2020-12-18 23:30 GMT
2-வது நாள் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறுகையில் ‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடும் நோக்குடன் இருந்தது போல் தெரிந்தது. அவர்கள் அஸ்வினை குறைவாக மதிப்பிட்டு விட்டனர். அதாவது அவரது பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுக்க திட்டமிட்டது போல் தோன்றியது. அது தான் அவர்களுக்கு பாதகமாக அமைந்து விட்டது’ என்றார். ‘ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்தியது இவர் தான். இந்த தொடர் முழுவதும் அவர் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்’ என்றும் பாண்டிங் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்