10 ஆயிரம் ரன்களை கடந்து மிதாலிராஜ் சாதனை

மிதாலிராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 36 ரன்கள் எடுத்த போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.

Update: 2021-03-13 04:26 GMT
லக்னோ, 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 36 ரன்கள் எடுத்த போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை, ஒட்டுமொத்த அளவில் 2-வது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். 38 வயதான மிதாலிராஜ் இதுவரை 291 இன்னிங்சில் விளையாடி 10,001 ரன்கள் (ஒரு நாள் போட்டியில் 6,974 ரன், டெஸ்டில் 663 ரன், 20 ஓவர் போட்டியில் 2,364 ரன்) குவித்துள்ளார். இந்த வகையில் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்களுடன் (316 இன்னிங்ஸ்) முதலிடம் வகிக்கிறார்.

சாதனை படைத்த மிதாலிராஜிக்கு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘10 ஆயிரம் சர்வதேச ரன்களை நிறைவு செய்த மிதாலிக்கு இதயபூர்வமான வாழ்த்துகள். இது ஒரு அற்புதமான சாதனை. வலுவான அவரது பயணம் தொடரட்டும்’ என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்