இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; புஜாரா 91 ரன்களில் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.

Update: 2021-08-28 10:30 GMT
லீட்ஸ்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 78 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் (121 ரன்) 432 ரன்கள் குவித்தது. 

அடுத்து 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது.நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  80 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து இருந்தது. புஜாரா 91 ரன்களுடனும் ( 180 பந்து, 15 பவுண்டரி), கேப்டன் கோலி 45 ரன்களுடனும் (94 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில்,  இன்று 4 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா மேற்கொண்டு ரன்கள் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 85-ஓவர்கள் நிலவரப்படி 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.  இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே மேற்கொண்டு135 ரன்கள் சேர்க்க வேண்டி இருந்தது. இதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்தின் கையே ஓங்கி நிற்கிறது. 

மேலும் செய்திகள்