கிரிக்கெட்: 16 வயதில் சதமடித்த இளம் அயர்லாந்து வீராங்கனை

அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை ஆமி ஹண்டர் 16 வயதிலேயே சதமடித்து அசத்தினார்.

Update: 2021-10-11 18:18 GMT
 ஹராரே,

ஜிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் இடையே மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் அயர்லாந்து அணி பேட்டிங் செய்து விளையாடியது. போட்டியின் போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர் தனது பிறந்தநாளில் சதமடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்து  சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் குறைந்த வயதில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். மூன்றாவதாக களமிறங்கிய அவர் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்தார்.

குறைந்த வயதில் சதமடித்தவர்களின் பட்டியலில் ஆண்கள் பிரிவில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 1996 -ல் 16 வயது  217 நாட்களில் இலங்கைக்கு எதிராக 102 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் மிதாலி ராஜ் 1999 இல் 16 வயது 205 நாட்களில் அயர்லாந்துக்கு எதிராக 114 ரன்கள் எடுத்து குறைந்த வயதில் சதமடித்த மகளிர் என்ற சாதனை படைத்தார். இதனை தற்போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர் தனது 16-வது பிறந்தநாள் அன்றே முறியடித்துள்ளது குறிப்படத்தக்கது.

மேலும் செய்திகள்