ஆலோசகராக தனது பணியை தொடங்கிய டோனி..!

20 ஓவர் உலக கோப்பையில் 24-ம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

Update: 2021-10-18 04:07 GMT
துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்  20 ஓவர்  உலகக் கோப்பைப் போட்டிகள் நேற்று தொடங்கியது. நவம்பர் 14ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. 20 ஓவர் உலக கோப்பையில் 24-ம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி  எதிர்கொள்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற டோனி, 20 உலகக் கோப்பைப் போட்டிக்காக மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். டோனியின் அனுபவம், தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் திறமை போன்றவை வீரர்களுக்கு சரியான விதத்தில் துணை புரியும் என்பதால், இந்த முடிவை பிசிசிஐ எடுத்தது. ஆலோசகராக பணிபுரிய ஊதியம் எதுவும் தேவையில்லை என டோனி கூறிவிட்டார். 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஆலோசகராக டோனி தனது பணியை துவங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. 

பிசிசிஐ தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ கிங் டோனிக்கு அன்பான வரவேற்பு அளிக்கிறோம். புதிய பணியுடன் இந்திய அணியில் டோனி மீண்டும் இணைந்து விட்டார்” என பதிவிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மேலும் செய்திகள்