கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவது கோலியின் தனிப்பட்ட முடிவு: பி.சி.சி.ஐ

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவு என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-23 04:18 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பிறகு, விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதில் இருந்து தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக நீடித்து வரும் அவர், தற்போது 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தான் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி தெரிவித்துள்ளார். இருப்பினும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலியே கேப்டனாகத் தொடருவார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது என்பது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவாகும். கேப்டன் பதவி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்