ஐ.சி.சி. போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

ஐ.சி.சி. நடத்தும் உலக அளவிலான போட்டிகளில் ஆஸ்திரேலியாவே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Update: 2021-11-15 02:41 GMT
கோப்புப்படம்
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் உலக அளவிலான போட்டிகளில் ஆஸ்திரேலியாவே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா  நேற்று வென்ற டி20 உலகக்கோப்பையையும் சேர்த்து அந்த அணி மொத்தம் எட்டு ஐ.சி.சி கோப்பைகளை தனதாக்கியுள்ளது.

ஏற்கனவே 5 முறை 50 ஓவர் உலக கோப்பையையும், இரண்டு முறை ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த சாதனை வரிசையில் 2-வது இடத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் (தலா 5 கோப்பை) அணிகள் உள்ளன.

அதேபோல் ஐ.சி.சி. தொடர்களில் ‘நாக்-அவுட்’ சுற்றில் ஆஸ்திரேலிய அணி ஒரு போதும் நியூசிலாந்திடம் தோற்றதில்லை. இந்த ஆட்டத்தையும் சேர்த்து 5 முறை நியூசிலாந்தை பதம்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்