நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்:பயிற்சியை தொடங்கிய இந்திய அணி

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை ) தொடங்குகிறது.

Update: 2021-11-23 16:51 GMT
கான்பூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3  20ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 20ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ( வியாழக்கிழமை ) தொடங்குகிறது .

இந்நிலையில்  இந்திய அணி கான்பூர் மைதானத்தில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளது .முதல் டெஸ்ட் போட்டியில்  விராட் கோலி விளையாடவில்லை  என்பதால் கேப்டனாக ரஹானே செய்லபடவுள்ளார். 


மேலும் செய்திகள்