ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் (நாளை) வியாழக்கிழமை தொடங்குகிறது

Update: 2021-12-15 10:00 GMT
அடிலெய்டு,

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில்  (நாளை) வியாழக்கிழமை தொடங்குகிறது. பகல்-இரவு போட்டியாக நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

இங்கிலாந்து அணி   : ஜோ ரூட் (கேப்டன்)  ஸ்டூவர்ட் பிராட் , ரோரி பேர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஹசீப் ஹமீத், ஜேக் லீச், டேவிட் மலான் , ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், பென்  ஸ்டோக்ஸ்,  கிறிஸ் வோக்ஸ் ,ஜேம்ஸ் ஆண்டர்சன் 


மேலும் செய்திகள்