அன்று தடுப்பு சுவர்...இன்று தலைமைப்பயிற்சியாளர்...ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்தநாள்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Update: 2022-01-11 08:55 GMT
கோப்புப்படம்
கேப்டவுன்,

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட்டை களத்திலிருந்து வெளியேற்ற எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரின் பந்துவீச்சை அசராமல் நின்று தடுத்து விளையாடுவார். இதனாலேயே இந்திய அணியின் தடுப்பு சுவர்  என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உலகின் சிறந்த பந்து வீச்சுவீச்சாளர்களுக்கு எதிராக நின்று பல மணிநேரம் பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர்.

இவர், கடந்த 1996-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். இதுவரை விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். அதே ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதுவரை அவர் விளையாடிய 344 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்களுடன் 10,889 ரன்களை குவித்துள்ளார்.

ஒரு வீரராக கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒரு சிறந்த பயிற்சியாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது பயிற்சியின் கீழ் பல வீரர்கள் தற்போதைய இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். தற்போது இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமை பயிற்சியாளராக தனது பணியினை செவ்வனே ஆற்றி வருகிறார்.

மேலும் செய்திகள்