ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Update: 2022-01-21 20:49 GMT
டிரினிடாட், 

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் டிரினிடாட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கன்னிங்கம் 11 ரன்னிலும், வலிண்டின் கிடிம் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். பொறுப்புடன் வெளையாடிய ப்ரிவிஸ் 96 ரன்கள் குவித்தார். கேப்டன் கீர்டன் 111 ரன்கள் விளாசினார். இறுதியில் காப்லாண்ட் அதிரடி காட்டி 47 ரன்கள் குவித்தார். 

தென் ஆப்பிரிக்கா 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்த போது  மழை குறுக்கீடு செய்ததால், ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா 3 ஓவர்கள் குறைக்கப்பட்டது.  இதையடுத்து டி.எல். விதிப்படி அயர்லாந்து அணிக்கு 312 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, தொடக்கம் முதலே திணறியது. தொடக்க ஆட்டக்காரரான நதன் மெக்கயர் அதிகபட்ச்மாக 42 ரன்கள் எடுத்தார்.தென் ஆப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சில்  அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 33 ஓவர்களில் 158 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்