இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ருதுராஜ் கெய்க்வாட் விலகல்
ருதுராஜ் கெய்க்வாட்-ற்கு பதிலாக மற்றொரு இந்திய தொடக்க வீரரான மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.;
தர்மசாலா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
இந்த நிலையில் 20 ஓவர் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்-ற்கு பதிலாக மற்றொரு இந்திய தொடக்க வீரரான மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.