உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: ஹர்மன்பிரீத் கவுர் சதம் வீண்; தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2022-02-27 05:43 GMT
 நியூசிலாந்து,

பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 6ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜ் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை இன்று எதிர்க்கொண்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர்  சதம் அடித்து அசத்தினார். அவர் 114 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார்.

245 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வோல்வார்ட் 85 ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் இலக்கை அடைந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்