2 ஆவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு 349 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2022-03-31 14:02 GMT
லாகூர்,

பாகிஸ்தான் -ஆஸ்திரேலியாஅணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒஉர்நாள் போட்டி லாகூரில் இன்ற நடைபெற்றுவருகிறது.

இந்த  போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்சும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். பின்ச் சந்தித்த முதல் பந்திலேவே அவுட்டாகி வெளியேறினார். 

ஹெட் 89 ரன்கள் குவித்தார். பென் மெக்டர்மோட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 104 ரன்களில் அவுட்டானார். லபுஸ்சேன் 59 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 

மேலும் செய்திகள்