மாநிலங்களவை உறுப்பினராகிறார் கங்குலி..?

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-05-09 09:19 GMT
கோப்புப்படம்
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி, கடந்த 2019ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின்கீழ் மாநிலங்களவை நியமன உறுப்பினராக கங்குலி அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

இம்மாத இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், நியமன உறுப்பினர் பதவிக்கு கங்குலியை மத்திய அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. நியமன உறுப்பினராக, கங்குலி அறிவிக்கப்படும்பட்சத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கான அனைத்து அதிகாரங்கள் மற்றும் சலுகைகளும் அவருக்கு கிடைக்கும். 

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கங்குலியை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், மேற்கு வங்க அரசியலை மையப்படுத்தி, கங்குலிக்கு எம்.பி. பதவி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்