இந்தியாவில் 2025-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

2025-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.;

Update:2022-07-27 01:35 IST

பர்மிங்காம்,

பர்மிங்காமில் நடந்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பொதுக்குழு கூட்டத்தில் எதிர்வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2025-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

இதே போல் 2024-ம் ஆண்டு 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டியை வங்காளதேசத்திலும், அதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இங்கிலாந்திலும் நடத்துவதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்