லைவ் அப்டேட்: உலகக்கோப்பை 2-வது அரையிறுதி - ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு
இன்றைய அரையிறுதியில் வெல்லும் அணி வருகிற 19-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.;
image courtesy; twitter/ @ICC
40 -வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 194 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் அசத்தல் பவுலிங்கால் ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது.5 விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா.
முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.
13 -வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 98 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி பெற 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் சதம் விளாசினார். சதம் விளாசிய அடுத்த பந்தே ட்ராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டேவிட் மில்லர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், வழக்கம் போல புஷ்பா பாடலுக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
45- வது ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 183 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
30 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 119 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
மழை பெய்ததன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.